பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருக்கும் ரைசா, நடு இரவில்... பாத்ரூமில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருக்கும் ரைசா, நடு இரவில்... பாத்ரூமில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரபல மாடலான ரைசா, உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே, நடிகர் தனுஷ் - அமலாபால் நடிப்பில், வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில், நடிகை கஜோலுக்கு பர்சனல் அசிஸ்டெண்டாக நடித்திருந்தார். 

இந்த படத்தில் வலுவான வேடத்தில் அவர் நடிக்க வில்லை என்றாலும், பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றதால் பிரபலமானார். இந்த படத்தில் இவர் வந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டன.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கையேடு, நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக... இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, சிறந்த அறிமுக நடிகைக்கான பல விருதுகளை பெற்று தந்தது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து குவிந்தது.

இந்த வருடம் மட்டும் இவரின் கை வசம், 'அலைஸ்', 'FIR', 'காதலிக்க நேரமில்லை', மற்றும் 'ஹாஷ்டேக் லவ்வர் ' ஆகிய 4 படங்கள் உள்ளன. நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மாடலிங் துறையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ரைசா.

இந்நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தன்னுடைய வீட்டிலேயே விதவிதமான போட்டோ ஷூட் நடத்த துவங்கி விட்டார். அந்த வகையில், நடு இரவில்... பாத்ரூமில் இருந்த படி கழுத்தில் நகை மட்டும் அணிந்து புல் மேக்அப்பில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படங்கள் இதோ...

Scroll to load tweet…