மக்கள் செல்லும் சாலையில் சட்ட விரோதமாக நடந்த கார் ரேஸ்..! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை!
கொரோனா அச்சம் காரணமாக, மக்கள் வெளியில் வரவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இவற்றை மீறி, நடிகை உட்பட 44 பேர் சட்ட விரோதமாக கார் ரேஸில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக, மக்கள் வெளியில் வரவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இவற்றை மீறி, நடிகை உட்பட 44 பேர் சட்ட விரோதமாக கார் ரேஸில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக அளவில் வளர்ந்த நாடுகளையே பதம் பார்த்து வரும் கொரோனா வைரஸை, கட்டுப்படுத்த, அந்தந்த நாடுகளிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பயம் ஒரு புறம் இருந்தாலும், மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஒரு சில தளர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது அந்தந்த நாடுகள். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் அட்லாண்டாவில், சட்டவிரோத கார் பந்தயங்கள் நடத்தியது மற்றும் ஆபத்தான ஸ்டண்ட் செய்ததற்காக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 களில் 'இன் தி ஹவுஸில்' நடித்த நடிகை மியா காம்ப்பல் தான் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ரேஸில் கலந்து கொண்ட அனைத்தும் 135mph க்கும் அதிகமான வேகத்தில் கார்களை இயக்கியதாகவும், இதன் காரணமாக மற்ற பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள் எதிரே வரும் வாகனத்தின் வேகம் தெரியாமல் திண்டாடியதாகவும் இந்த கார் ரேஸை நேரில் பார்த்த பலர் கூறுகிறார்கள்.
திரைப்படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் போல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவ குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடித்த வரும் போலீஸ் 29 கார்களை பறிமுதல் செய்து, நடிகை உட்பட 44 பேரை கைது செய்துள்ளனர்.