மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சீதக்காதி’ படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக மிக அழுத்தமான பாத்திரத்தில் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் நடிகை அர்ச்சனா.

அவரது மலரும் நினைவுகளில் ஒன்றைப் படியுங்கள். அசந்தே போவீர்கள்.

'சினிமாவுக்கு தகுதியே இல்லாதவர்' என்று சொல்லி, என்னை ஒரு சில படங்களில் இருந்து நீக்கிவிட்டார்கள். அப்போதுதான் பாலு மகேந்திரா அவர்களை சந்தித்தேன். அவரை யார் சந்தித்தாலும் புகைப்படம் எடுப்பார், என்னையும் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்கள் கழித்து "எனது படத்தில் நீ நடிக்கிற" என்றார். நான் நடிக்கலாமா என்று வெறுத்து போய் இருந்தேன்.

"அன்பு, பாசம், காதல், உண்மை, உணர்வுகள், சினிமா இவை எல்லாமே எளிமையாது. எனது எளிமையான சினிமாவுக்கு உன்னை மாதிரி ஓர் எளிமையான பெண் இருந்தால் போதும்" என்று சொன்னார். அதற்குப் பிறகு என்னை அவரது படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

மூன்றாம் நாள் படப்பிடிப்பில் ஒரு பெரிய பத்திரிகையாளர் வந்து பாலு மகேந்திரா அவர்களை தனியாக அழைத்து சென்று "இவரை வேண்டாம் என மூன்று படத்தில் நீக்கி இருக்கிறார்கள். இவரை நீங்கள் நாயகியாக போட்டு படம் எடுக்கிறீர்களே. ஒரு நாளைக்கு ஒரு படத்தில் இருக்காங்க அவங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க" என்று கேட்டார்.

அவர் எப்போதுமே பதிலை கைப்பட எழுதித்தான் கொடுப்பார். அவரிடம் இருந்து ஒரு பேப்பர் வாங்கி அவருடைய பதிலை எழுதிக் கொடுத்தார்.
அந்த பதிலைப் பார்த்து பத்திரிகையாளர் போய்விட்டார். அப்போது நான் பாலு மகேந்திரா அவர்களிடம் "நீங்க என்ன எழுதிக் கொடுத்தீங்க" என்று கேட்டேன்.

"THIS ARTIST WILL BECOME AN IMPORTANT ACTOR IN INDIAN CINEMA. SHE WILL GET A NATIONAL AWARD" என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். அவர் எழுதிக் கொடுத்த சில வருடங்களிலேயே ஒரு தடவை அல்ல இரண்டு தடவை தேசிய விருது வாங்கினேன்

-அர்ச்சனா