அருந்ததி படத்தின் வெற்றிக்குப்பிறகு, நடிகை அனுஷ்கா ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்துவருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'பாகமதி' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் மனம் தளராக அனுஷ்கா, அடுத்து ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 'நிசப்தம்' படத்தில் நடித்துள்ளார். 

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என  5 மொழிகளில் தயாராகிறது.  நிசப்தம் படத்தில், சாக்ஷி என்ற கேரக்டரில் வாய்பேசாத காது கேளாத ஓவியராக அனுஷ்கா நடித்துள்ளார். 5 மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம், உலகம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 

தற்போது அனுஷ்கா சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தாலும், அவரைப் பற்றிய வதந்திகளுக்கு அளவே இல்லை. பாகுபலி படத்தில் நடித்த போது, பிரபாஸ் உடன் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

 சமீபத்தில் அனுஷ்கா ஒரு வட இந்திய கிரிக்கெட் வீரரை காதலித்து வருவதாக தெலுங்கு மீடியாக்களில் பரவிய வதந்தி, சோசியல் மீடியாக்களிலும் பேசும் பொருளாக மாறியது. தனது திருமணம் குறித்து அடுத்தடுத்து வதந்தி பரவுவதால் கடுப்பான அனுஷ்கா, அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 

அதில் "நான் நடிக்கும் நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசினார்கள், பின்னர் தொழிதிபரை மணக்கிறேன் என்றார்கள். அதன்பின் ஒரு டாக்டரை திருமணம் செய்யப்போகிறேன் என்றார்கள். இப்படி என்னை பற்றி பரவும் செய்திகள் வருத்தமளிக்கிறது. என்னை எத்தனை பேருடன் தான் திருமணம் செய்து வைப்பீர்கள். எனக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை என் பெற்றோரிடம் விட்டுவிட்டேன். அவர்கள் முடிவு எடுப்பார்கள்" என்று செம்ம கடுப்பாக பதிலளித்துள்ளார் அனுஷ்கா.