Asianet News TamilAsianet News Tamil

Anushka Shetty Birthday: அனுஷ்காவின் 40-ஆவது பிறந்தநாளில் வெளியான அடுத்த பட அறிவிப்பு!!

நடிகை அனுஷ்கா இன்று, தன்னுடைய 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்ததாக இவர் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

Actress Anushka shetty next movie Announcement released on 40th birthday
Author
Chennai, First Published Nov 7, 2021, 3:40 PM IST

நடிகை அனுஷ்கா இன்று, தன்னுடைய 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்ததாக இவர் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில், டாப் ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைவருடனும் நடித்துள்ளவர் அனுஷ்கா. விஜய சாந்திக்கு பிறகு, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு, அவரது பெற்றோர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதால், தன்னை தேடி வரும் படங்களின் வாய்ப்புகளை கூட தொடர்ந்து மறுத்து வந்தார். அதே நேரத்தில் தன்னுடைய மனதுக்கு பிடித்த கதைகளில் மட்டுமே நடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

மேலும் செய்திகள்: Malavika Mohanan: ஜாக்கெட் போடாமல்... மாராப்பை முறுக்கி கவர்ச்சியில் எல்லை மீறிய மாளவிகா மோகனன்! செம்ம ஹாட்!

 

Actress Anushka shetty next movie Announcement released on 40th birthday

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில், 'சைலென்ஸ்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் காது, கேட்காதா, வாய் பேச முடியாத பெண்ணாக அனுஷ்கா நடித்திருந்தார். இதை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த அனுஷ்காவின் 40 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: Kamal Haasan: அன்று முதல் இன்று வரை... உலக நாயகன் கமல்ஹாசனின் மறக்க 15 முடியாத வேடங்கள்!! புகைப்பட தொகுப்பு!

 

Actress Anushka shetty next movie Announcement released on 40th birthday

இப்படத்தை சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட பிரமாண்ட படங்களை தயாரித்து வரும் நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. காணொலி வாயிலாக இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். ஏற்கனவே யூவி கிரியேஷன் தயாரிப்பில் அனுஷ்கா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மிர்ச்சி திரைப்படத்திலும், 2018-ல் வெளியான பாகமதியில் படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: Happy Birthday Kamal Haasan: 'கலைஞானி' கமலஹாசனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து... முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!

 

Actress Anushka shetty next movie Announcement released on 40th birthday

தற்போது, மூன்றாவது முறையாக யூவி கிரியேஷன் உடன் இணைகிறார். அனுஷ்காவின் 48-வது படமாக உருவாக உள்ள இந்த படம், நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபு என்பவர் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: பெண்ணா... இல்லை தேவதையா? மஞ்சள் நிற சல்வாரில்... இளம் நெஞ்சங்களை அலைபாய விட்ட அதிதி ஷங்கர்!!

 

Actress Anushka shetty next movie Announcement released on 40th birthday

அனுஷ்காவின் பிறந்தநாளன்று வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாடர்ன் மங்கையாக புதிய தோற்றத்தில் இப்படத்தில் அனுஷ்கா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தையும் நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios