தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும்  அனுஷ்காவிற்கு திருமணம் ஆக வேண்டும் என அவருடைய பெற்றோர் கோவில் கோவிலாக சென்று, பல பரிகார பூஜைகள் செய்தும் இன்னும் அவருக்கு ஏற்ற ஒரு வரன் கிடைக்கவில்லை.

'பாகுபலி' படத்திற்கு பின் நடிகை அனுஷ்காவும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என நினைத்து, வந்த பட வாய்ப்புகளை தவிர்த்து சில மாதங்கள் வீட்டிலேயே இருந்தார். இருப்பினும் கல்யாணம் கை கூடாததால் மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

இந்நிலையில்... நடிகை அனுஸ்காவிற்கும் பிரபல இயக்குனர் ஒருவரின் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக, தெலுங்கு மீடிகள் கிசுகிசுத்து வருகிறது.

எனினும் அனுஷ்காவின் திருமணம் குறித்து பல வதந்திகள் புதுசு புதுசா வருவது தொடர்கதையாகிவிட்டதால் இதுவும் அது போன்ற ஒரு கட்டு கதையா? அல்லது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.