நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'பிரேமம்'.

இந்த படத்தின் மூலம் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக அனைவராலும் அறியப்பட்டவர் அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். 

தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.

அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார்,  அவர் நடித்த 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்',   ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.  இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர் முழுதாய் நம்பியுள்ள திரைப்படம் 'ராட்சஷகுடு' விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார் அனுபமா.   இந்த படம் நடிகர் விஷ்ணு அமலாபால் நடித்த 'ராட்சசன்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.