மலையாள திரையுலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு 'பொட்டாஸ் பாம்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அணு சித்ரா. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக  பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 22 வயதாகும் இவர், 18 வயதிலேயே தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்புககு முழுக்கு போட்டு விடாமல், நடிகை சமந்தா பாணியில் தொடர்ந்தும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பதாக, மலையாள திரையுலகத்தில் ஒரு செய்தி வைரலாக பரவியது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, நடிகை அணு சித்ரா. தற்போதைக்கு குழந்தை பெற்று கொள்ளும் ஐடியாவில் இல்லை என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை அணு சித்ரா மலையாளத்தை தவிர, தமிழிலும் பொதுநலன் கருதி என்கிற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.