தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்",  "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது தனது உடல் எடையை கணிசமாக குறைந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள அஞ்சலி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். 

தற்போது அஞ்சலி, மாதவன், அனுஷ்காவுடன் நடித்த நிசப்தம் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள அஞ்சலி, விதவிதமான மார்டன் உடைகளில் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக போட்டோ ஷூட்களை எடுத்து அசத்தி வருகிறார்.  லாக்டவுன் நேரத்தில் தொடை வரை உள்ள குட்டை உடைகளில் அஞ்சலி கொடுத்த கிளாமர் போஸ்கள் லைக்குகளை குவித்தது. 

இதையும் படிங்க: இந்த நடிகையால் மட்டும் எப்படி?... புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டும் அர்ச்சனா குப்தா!

இந்நிலையில் அழகில் அஞ்சலியை பின்னுத் தள்ளும் படியாக அவரது தங்கையின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஞ்சலியை சினிமாவிற்கு கொண்டு மிகப்பெரிய நடிகையாக மாற்றியவர் அவரது சித்தி பாரதி தேவி, அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் இருக்கிறார். அஞ்சலியை விட அழகாக இருக்கும் ஆரத்யாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ...