கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், பேரன்பு...என தமிழ் சினிமாவின் மைல் கல் திரைப்படங்களின் நாயகி அஞ்சலி. கதையம்சமுள்ள படங்கள் மட்டுமல்ல, அம்சமான கிளாமர் உள்ள படங்களிலும் பட்டையை கிளப்புவது அஞ்சலியின் செம்ம ஸ்டைல். 

இப்படி செம்ம திறமையான அஞ்சலி பொண்ணுக்கும் சர்ச்சைகளுக்கும் செம்ம சம்பந்தமுண்டு. அவரை அறிமுகம் செய்த இயக்குநருடன் பஞ்சாயத்து, இடையில் சில காலம் ஆள் காணாமல் போனது, ஜெய்யுடன் காதல், பிரேக் - அப் என்று அஞ்சலியை சுற்றிச் சுற்றி பரபரப்புகள் றெக்கை கட்டிக் கொண்டே தான் இருக்கும். 

இந்த நிலையில் இப்போது அஞ்சலியும் ‘அந்த முடிவை’ எடுத்துவிட்டார். நாடோடிகள் 2, விஜய் சேதுபதியுடன் புதுப்படம், அனுஷ்கா நடிக்கும் படமொன்றில் பிரதான ரோல் என்று வரிசையாக ஆஃபர்கள் இருந்தும் ஏன் அந்த முடிவை அவர் எடுத்தார்? என்பதே இப்போது கோலிவுட்டை அதிர வைத்திருக்கிறது. பொதுவாக மார்க்கெட் இல்லாத நடிகைகள் செய்யும் வேலையை ஏன் அஞ்சலி இப்போதே செய்கிறாரே! என்கிறார்கள். 

அப்படி என்ன முடிவெடுத்துள்ளார் அஞ்சலி? தெரியுமா!....வேறொன்றுமில்லை, வெப்சீரிஸில் நடிக்க முடிவெடுத்துவிட்டார். நயன் தாராவின் பாய் ஃப்ரெண்டான இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் தயாராகும் வெப்சீரிஸில் அஞ்சலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான ஷூட்டிங்கே துவங்கிவிட்டது. 

ஏன் இந்த முடிவு? என்று அஞ்சலியிடமே கேட்டபோது “ஓய்! இப்ப இதுதான்யா டிரெண்ட். சமந்தா, காஜல்ன்னு எல்லா ஃபேம் பொண்ணுங்களுமே வெப் சீரிஸ்ல தலைகாட்டுறாங்க. எனக்கும் ஒரு சேஞ்ச் தேவைப்பட்டுச்சு, அதுலேயும் விக்கியோட டைரக்ஷன். அதான் ஓ.கே. சொல்லிட்டேன். 

சினிமாவோட புது வெர்ஷனான வெப் சீரிஸ்லேயும் நாம கலக்குவோமே!” என்கிறார். 
நீ கலக்குவ அஞ்சுமா!