இயக்குனர் ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பார்த்தாலே நம்ம பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் இவர் முகம், புருவங்களின் மத்தியில் பொட்டு, கன்னங்களில் வெளிர் சிவப்புப் பருக்கள், உதட்டில் சிறு புன்னகையோடு எதார்த்தமான கிராமத்து தமிழ் பேசி, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் அஞ்சலி. 

தமிழில் நல்ல நடிகையாக பார்க்கப்பட்டாலும், இவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போனது, இதற்கு முக்கிய காரணம் இவர் சமீப காலமாக ஓவர் கவர்ச்சி காட்டியது தான் என்று கூறப்பட்டது. இதானால் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார். 

தமிழ் படங்கள் இவருக்கு இல்லாத சமயத்தில், நிறைய வதந்திகள் வந்ததாகவும். இப்படி பரப்பப்பட்ட வதந்திகளுக்கு பதில் சொல்லியே ஒரு நிலையில் ஓஞ்சுபோயிட்டதாக கூறியுள்ளார் அஞ்சலி.

கிளாமர் ரசிகர்களை இழக்க வைத்துவிட்டதா?

கிளாமர் குறித்து பேசிய அஞ்சலி. நான் கிளாமர் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியதே இல்லை. எப்போதும் தன்னை தேடி ஹோம்லி கதாபாத்திரம் வந்ததால். ரசிகள்கள் என்னை அப்படியே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போது ஜிம்முக்கு போய் வொர்க் - அவட் பண்ணி ஃபிட் ஆகிட்டேன். இனி துணிந்து கிளாமர் கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பேன் இதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.

குடும்ப பிரச்சனை?

தன்னுடைய சித்தியின் மூலம், பல கஷ்டங்களை அனுபவித்த இவர் தற்போது இந்த பிரச்சனையில் இருந்து சிறிது சிறிதாக வெளியில் வந்துள்ளார். இதனால் தன் "சித்தி குடும்பம் பற்றும் எதுவுமே பேச விரும்பவில்லை என கூறி தன்னுடைய குடும்பம் பற்றி கூறியுள்ளார்.