சமீப காலமாக திரையுலகில் நடைபெறும் பாலியல் சம்பந்தமான குற்றங்களை நடிகைகள் தானாக முன்வந்து கூறி வருகிறார்கள். அந்த வகையில், தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி டோலிவுட், மற்றும் கோலிவுட் பிரபலங்கள் மீது குற்றம் சாட்டினார். 

இவருக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தாலும், முதல் முதலாக ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு குரல் கொடுத்தவர், நடிகை ஆண்ரியா தான். ஸ்ரீரெட்டியை தொடர்ந்து 'தீராத விளையாட்டு பிள்ளை' மற்றும் பாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமான தானுஸ்ரீ தத்தா நடிகரும், இயக்குனருமான நானா படேகர் மீது குற்றம் கூறியபோது அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது, காட்டு தீ போல் எரிந்து வரும் 'மீடூ' விவகாரம் குறித்து ஆண்ட்ரியா சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது மீடூ க்கு எதிராக உள்ளது என பலர் கூறி வருகிறார்கள்.

மீடூ விவகாரம் குறித்து ஆண்ட்ரியா, எனக்கு இது போன்ற ஒரு அனுபவம் இல்லை. நான் ஒருவருடன் டேட்டிங் செல்கிறேன் என்றால், எனக்கு அவரை பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அதே போன்று தான் அவருக்கும் என்னை பிடித்திருக்கும். அது தான் உண்மையும் கூட...

ஒருவருடைய படுக்கையில் யார் இருக்கின்றார்கள், யார் இல்லை என்பதெல்லாம், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயம். படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல. ஆனால், இதில் நாம் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறோம். தங்களது வேலைக்காக பெண்கள் படுக்கையை பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள்.

பெண்கள் முதலில் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படியிருந்தால், யாரும் அவர்களை நெருங்க முடியாது. தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், ஆண்கள் மட்டுமல்ல எல்லோரும் கிட்ட நெருங்கத்தான் செய்வார்கள். என அதிரடியாக கூறியுள்ளார். இவருடைய இந்த கருத்தை நெட்டிசென்கள் பலர் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.