கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக "பச்சைக்கிளி முத்துச்சரம்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆன்ட்ரியா. அதன்பின்னர் ஆண்ட்ரியா நடித்த ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை போன்ற படங்கள் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வரும் ஆன்ட்ரியா, கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டுவதில் தயங்கியது இல்லை. வடசென்னை படத்தில் கூட ஆன்ட்ரியா டாப்லெஸ் சீனில் நடித்தது, சோசியல் மீடியாவில் வைரலானது.

நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் தமிழ் திரையுலகில் வலம் வருபவர் ஆன்ட்ரியா. மேலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் ஆன்ட்ரியா, இசை நிகழ்ச்சிகளிலும் படுகவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறார்.

சமீபத்தில் திருமணமான ஆண் ஒருவருடனான தொடர்பில் இருந்ததாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட தான் தற்போது மீண்டு வந்துள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது விஜய்யின் தளபதி 64 படத்தில் நடித்து வரும் ஆன்ட்ரியா, இசை நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் படுகவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு பாடல் பாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கால் முழுவதும் தெரியும் படியாக ஷார்ட் டாப்பில் வா, வா, பக்கம் வா என்ற பாடலைப் பாடி ரசிகர்களை  கிறங்கடித்துள்ளார். ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.