தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. 

அதன் மூலம் கமலுடன் விஸ்வரூபம் படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆண்ட்ரியா நடித்த  வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

இதையும் படிங்க: குட்டி ஆல்யாவின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்... குவியும் லைக்ஸ்...!

தற்போது தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார். நடிப்பை தவிர திறமையான பாடகியாக வலம் வரும் ஆண்ட்ரியா பல்வேறு மேடை கச்சேரிகளில் கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 

இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் ஆபாச நடனம்...வைரலாகும் “கோமாளி” நடிகையின் ரிலாக்சேஷன் வீடியோ...!

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வி.வி.ஐ.பி.க்கள் முதல் சாமானியர்கள் வரை வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். 

வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷிப்படுத்த முடிவெடுத்த ஆண்ட்ரியா அசத்தலான காரியம் ஒன்றை செய்து முடிந்துள்ளார்.கடந்த 26ம் தேதி மாலை 5 மணி அளவில், இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் தோன்றிய ஆண்ட்ரியா, ரசிகர்களின் வேண்டுகோளின் படி அவர்கள் கேட்ட பாடல்களையெல்லாம் பாடி அசதியுள்ளார்.