Asianet News TamilAsianet News Tamil

உலக நாயகனை விடமாட்டாங்க போலயே... மீண்டும் அந்த 2 ஹீரோயின்களுடன் ஜோடி சேரும் கமல் ஹாசன்?

ஆனால்  “தலைவன் இருக்கிறான்” படத்தில் கமல் ஹாசன் தான் நடிக்க உள்ளாராம். அத்துடன் சூப்பர் அப்டேட் ஒன்றும் கசிந்துள்ளது. 
 

Actress Andrea and Pooja Kumar Joining Kamal Hassan Thalaivan Irrukindran Movie
Author
Chennai, First Published May 21, 2020, 3:16 PM IST

அரசியல் வாழ்க்கையில் நுழைந்த பிறகு படங்களில் நடிப்பதை உலக நாயகன் கமல் ஹாசன் குறைத்துக் கொண்டுள்ளார். “விஸ்வரூபம் 2” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “சபாஷ் நாயுடு” என்ற படத்தை தொடங்கினார். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் அந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தில் நடித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் “இந்தியன் 2” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த கிரேன் விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Actress Andrea and Pooja Kumar Joining Kamal Hassan Thalaivan Irrukindran Movie

இதையும் படிங்க: இந்த நடிகையால் மட்டும் எப்படி?... புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டும் அர்ச்சனா குப்தா!

அந்த பயங்கர விபத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட “இந்தியன் 2” படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவே இல்லை. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு கமல் ஹாசன் “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை அறிவித்திருந்தார். அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மையமாக கொண்ட த்ரில்லர் கதையான இதை கமல் ஹாசன் இயக்கி நடிக்கவிருந்தார். இந்த படத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளதாகவும், வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. 

Actress Andrea and Pooja Kumar Joining Kamal Hassan Thalaivan Irrukindran Movie

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

தற்போது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் கமல் ஹாசன் “தலைவன் இருக்கிறான்” படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்ற ஐடியாவில் உள்ளாராம். அதேபோல் படத்தையும் தான் இயக்காமல் வேறு யாராவது வைத்து இயக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். தான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கமல் ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால்  “தலைவன் இருக்கிறான்” படத்தில் கமல் ஹாசன் தான் நடிக்க உள்ளாராம். அத்துடன் சூப்பர் அப்டேட் ஒன்றும் கசிந்துள்ளது. 

Actress Andrea and Pooja Kumar Joining Kamal Hassan Thalaivan Irrukindran Movie

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

இந்த படத்தில்  “விஸ்வரூபம்” முதல், இரண்டாம் பாகம் மற்றும்  “உத்தம வில்லன்” ஆகிய படங்களில் நடித்த ஆன்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த படம் தேவர் மகன் பார்ட் 2 என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைவன் இருக்கிறான் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் லாக்டவுனுக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios