MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Rajinikanth: நான் மதுப்பழக்கத்தை நிறுத்த 'அவர்' தான் காரணம்! ரஜினிகாந்த் சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

Rajinikanth: நான் மதுப்பழக்கத்தை நிறுத்த 'அவர்' தான் காரணம்! ரஜினிகாந்த் சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மதுப்பழக்கத்தைக் கைவிட முக்கியக் காரணம் அவரது குருவான பாலச்சந்தர் தான் காரணம் என பேசியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது? என விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 24 2026, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரஜினிகாந்த் மதுப்பழக்கத்தை நிறுத்த யார் காரணம்?
Image Credit : X

ரஜினிகாந்த் மதுப்பழக்கத்தை நிறுத்த யார் காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்தியா முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தனது எளிமையான குணம், தனித்துவமான ஸ்டைல், அசாத்தியமான நடிப்பு என பல தசாப்தங்களாக ரசிகர்களை ஈர்த்து வரும் ரஜினி, தனது ஆரம்ப காலங்களில் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தது பற்றி பலமுறை வெளிப்படையாகப் பேசியுள்ளார். அந்தப் பழக்கத்தை முழுவதுமாக கைவிடக் காரணமாக இருந்த நபர் யார், அந்த முடிவை எடுக்க வைத்த சம்பவம் என்ன என்பது குறித்த ரஜினிகாந்த் பேசிய ஒரு பழைய பேட்டி மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஷூட்டிங் ஸ்பாட்டில் சரக்கு... மாட்டிக்கொண்ட ரஜினி!
Image Credit : X

ஷூட்டிங் ஸ்பாட்டில் சரக்கு... மாட்டிக்கொண்ட ரஜினி!

தனது கரியரின் ஆரம்ப நாட்களைப் பற்றி ரஜினிகாந்த் ஒருமுறை இப்படிப் பகிர்ந்துகொண்டார். "ஒருநாள் ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அப்புறம் 'பேக்கப்' சொல்லிட்டாங்க. ஷூட்டிங் முடிஞ்சதும் நான் கொஞ்சம் சரக்கு அடிச்சேன். அப்போ, உதவி இயக்குநர் ஓடிவந்து, 'சார், ஒரு சீன் மிஸ் ஆகிடுச்சு. அதை ஷூட் பண்ணனும், டைரக்டர் கூப்பிடுறார்'னு சொன்னார்" என்று ரஜினி அந்த சம்பவத்தை விவரித்தார்.

அந்த நேரத்தில், தான் குடித்திருப்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, மீண்டும் குளித்து, உடை மாற்றிக்கொண்டு ஷூட்டிங்கிற்குச் சென்றதாக அவர் நினைவுகூர்ந்தார். ஆனால், ரஜினியால் அந்த விஷயத்தை மறைக்க முடியவில்லை. அவர் குடித்திருப்பதை இயக்குநர் கே. பாலசந்தர் உடனடியாகக் கண்டுபிடித்துவிட்டார்.

Related Articles

Related image1
Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
Related image2
Songs: தலைவர் ரஜினி வைப்... Gen Z முதல் 90s Kids வரை எனர்ஜி ஏற்றும் 5 மந்திரப் பாடல்கள்!
34
பாலசந்தரின் அந்தக் கேள்வி
Image Credit : X

பாலசந்தரின் அந்தக் கேள்வி

ரஜினியிடம் வந்த பாலசந்தர், "உனக்கு நாகேஷைத் தெரியுமா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த், "தெரியும் சார்" என்று பதிலளித்திருக்கிறார். அப்போது பாலசந்தர், நடிகர் நாகேஷின் அபாரமான திறமையையும், குடிப் பழக்கத்தால் அவரது வாழ்க்கையும், சினிமா கரியரும் எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டி ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

"அவர் எப்பேர்ப்பட்ட நடிகர் தெரியுமா? அவர் முன்னாடி நீ ஒண்ணுமே இல்லை. ஆனால் குடிப் பழக்கத்தால வாழ்க்கையையே கெடுத்துக்கிட்டார். இனிமே ஷூட்டிங்ல நீ குடிச்சதா என் கவனத்துக்கு வந்தா, உன்னை சும்மா விட மாட்டேன்" என்று பாலசந்தர் கடுமையாக எச்சரித்ததாக ரஜினிகாந்த் கூறினார்.

44
அன்றோடு குடிக்கு குட்பை சொன்ன ரஜினி
Image Credit : Asianet News

அன்றோடு குடிக்கு குட்பை சொன்ன ரஜினி

பாலசந்தரின் அந்த வார்த்தைகள் ரஜினிகாந்த் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாம். அன்றே குடிப் பழக்கத்தை விட்டுவிடும் முடிவை எடுத்ததாக அந்தப் பேட்டியில் ரஜினி சொல்லியிருந்தார். "அந்த நாளிலிருந்து நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். அதன்பிறகு, ஜம்மு-காஷ்மீர் போன்ற கடுமையான குளிர் பிரதேசங்களில் ஷூட்டிங் நடந்தபோது கூட நான் சரக்கைத் தொடவே இல்லை, என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பாலசந்தரின் வார்த்தை... மாறிய வாழ்க்கை

ரஜினிகாந்தின் சினிமா பயணத்தில் இயக்குநர் கே. பாலசந்தருக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் உண்டு. ரஜினியிடம் இருந்த திறமையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவருக்குப் பெரிய வாய்ப்புகளை வழங்கியவர் பாலசந்தர்.

ஒரு குருவின் கடுமையான எச்சரிக்கை, எப்படி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது இந்த சம்பவம் மூலம் தெரிகிறது. ஒரு ஷூட்டிங் ஸ்பாட் நிகழ்வு, தனது வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது என ரஜினி கூறிய இந்த விஷயம், இப்போது அவரது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
OTT Crime Thriller : ஓடிடியில் செம ஒர்த்தான தமிழ் படம்... இந்த வீக்கெண்ட் மிஸ் பண்ணாம பாருங்க!
Recommended image2
Trisha : கோடிகளில் புரளும் த்ரிஷா; சென்னை வீடு முதல் லண்டன் பங்களா வரை... முழு சொத்து மதிப்பு இதோ!
Related Stories
Recommended image1
Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
Recommended image2
Songs: தலைவர் ரஜினி வைப்... Gen Z முதல் 90s Kids வரை எனர்ஜி ஏற்றும் 5 மந்திரப் பாடல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved