Asianet News TamilAsianet News Tamil

பெற்றோரை இழந்த பெண்ணை தத்தெடுத்த மருத்துவ கனவை நிஜமாக்கிய ரோஜா.! குவியும் வாழ்த்து.!

நடிகை ரோஜா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் புஷ்பா என்கிற பெண்ணை தத்தெடுத்த நிலையில், தற்போது அவரின் மருத்துவக்கனவை நிஜமாகியுள்ளார். ரோஜாவின் செயலுக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

Actress and mla roja who fulfilled her adopted girl medical dream
Author
First Published Nov 21, 2022, 11:44 PM IST

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவம்  செய்ய வசதி இல்லாமல்  தாய், தந்தையரை இழந்து தன்னந்தனியாக நின்ற பெண் தான் புஷ்பா. அவரை நகரி தொகுதியின் எம் எல் ஏ வும், ஆந்திரப் பிரதேச சுற்றுலா மற்றும் இளைஞர்கள் நலன் மேம்பாட்டு நலத்துறை அமைச்சருமானரோஜா செல்வமணி  தத்தெடுத்தார்.

அந்த சிறுமிக்கான கல்வியை, வாழ்நாள் முழுவதுற்குமான படிப்பு செலவை தான் ஏற்பதாக அறிவித்தார். அதன்படி அவருக்குண்டான கல்விச் செலவுகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று படிக்க வைத்தார். அந்த சிறுமி தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப்  பெற்று, திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்று முதலாமாண்டு MBBS பட்டப் படிப்பில் சேர வாய்ப்பு பெற்றுள்ளார். 

தமிழ் ஓய்ந்ததோ? தன்னிகரற்ற எழுத்து சாய்ந்ததோ?... கண்ணீருடன் ஆரூர் தாஸுக்கு இரங்கல் தெரிவித்த எம்.எஸ்.பாஸ்கர்!

Actress and mla roja who fulfilled her adopted girl medical dream

மருத்துவ வசதி இல்லாமல் தன் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும்  அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக செய்வதே என் லட்சியம் என்று மேடையில் அறிவித்தார். அதைப் பாராட்டி ரோஜா மற்றும் இயக்குநர்  RK. செல்வமணி  அந்த பெண்ணுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

'வாரிசு' பாடல் குறித்து... தளபதி ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன டான்ஸ் மாஸ்டர் ஜானி!

Actress and mla roja who fulfilled her adopted girl medical dream

ஆச்சர்ய படுத்தும் தோற்றத்தில்... திருக்குறுங்குடி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற கீர்த்தி சுரேஷ்! போட்டோஸ்..!

MBBS படிப்புக்கு உண்டான மொத்த செலவையும் தான் ஏற்பதாக ஏற்கனவே அறிவித்ததை  உறுதி செய்து கல்வி கட்டணங்களை கட்டி  வாழ்த்து தெரிவித்தார். தத்தெடுத்த பெண்ணாக இருந்தாலும், அவர் என்ன படிக்க விரும்புகிறாரோ அதற்காக அவரை ஊக்குவித்து... அவரது மருத்துவ கனவை நிஜமாகிய ரோஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios