நடிகையும் , பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை, ஞாயிற்று கிழமை முழு பொது முடக்கம் ஆகியவை தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், ஏதேனும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர், நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ள நிலையில், தற்போது குஷ்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Scroll to load tweet…

முன்னதாக பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து சென்னையில் பட்டினப்பாக்கத்தில் கடந்த 7ஆம் தேதி பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.