சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. கண்ணுக்கு தெரியாத இந்த கொடிய அரக்கனுக்கு எதிராக இதுவரை தடுப்பு மருத்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஒன்றே தற்போதைய தீர்வாக உள்ளது.  அதனால் தான் இந்தியாவில் மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "கொஞ்சம் கூட கொடுத்து கூப்பிடுங்க"... காஜல் அகர்வாலை விடாமல் பேரம் பேசும் வாரிசு நடிகர்...!

ஊரடங்கு பிரச்சனையால் சரிந்து வரும் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக சில கட்டுப்பாடுகளுடன் சில தொழிற்சாலைகள் மற்றும் கடைகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டிலிருந்து வெளியே வரும் அனைத்து பொது மக்களும் மாஸ்க் அணிந்து வர வேண்டியது கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

மருத்துவர்களுக்கு தேவையான முழு கவச உடை மற்றும் முக கவசங்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தயாரித்து அவற்றை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர். தற்பொழுது ஊரடங்கு சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் முக கவசம் அணிவது என்பது கட்டாயமான ஒன்றாக இருந்து வருகிறது. ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டாலும் , மாஸ்க் அணிவது நிச்சயம் சில காலங்களுக்கு கட்டாயமாக இருக்குm என்பதனால் பல்வேறு நிறுவனங்கள் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் துணியால் ஆன புதுவித மாஸ்குகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, கமல் மற்றும் முன்னணி நடிகைகளின் புகைப்படங்களுடன் மாஸ்குகள் தயாராகி உள்ளன. 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அந்த மாஸ்களின் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. உயிர் காக்கும் மாஸ்குகளில் கூட நடிகர், நடிகைகளின் முகத்தை ரசிகர்கள் தேடி, தேடி வாங்கி வருகின்றனர். வேற எந்த மாநிலத்திலும், நாட்டிலும் நடந்தேறாத கொடுமை தமிழகத்தில் மட்டும் நடந்து வருகிறது. உயிர் கொல்லி கொரோனாவை விட தனக்கு பிடித்தவர்களின் போட்டோ போட்ட மாஸ்க்கை தான் வாங்கி போடுவேன் என்ற போட்டா போட்டி போடும் மக்கள் மத்தியில் தான் வசித்து வருகிறோம்.