80கள், 90களில் மிகவும் பிரபலமாக இருந்த கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அவள் அப்படித்தான் என்கிற பெயரில் படமாக்குகிறார்கள். காயத்ரி பிலிஸ், முரளி சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா பட இயக்குநர் மணிகண்டன் இயக்க உள்ளார். 

சில்க் ஸ்மிதா போலவே வசீகர கண்கள், ஈர இதழ்களையும் கொண்ட பெண்ணை வலை வீசி தேடி வந்தனர். தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு காரணம் சில்க் ஸ்மிதா போல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்த அவர், ‘புதிய ஆரம்பம், கோலிவுட், தமிழ்’ என சில்க் ஸ்மிதாவின் தோற்றம் போல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். 

அதனால் சில்க் கதாபாத்திரத்தில் இவர் தான் நடிக்கிறார் என செய்திகள் பரவியது. இதனால் ரசிகர்களும் படம் விரைவில் ஆரம்பமாகிவிடும் என கனவில் மிதந்தனர். இந்நிலையில், நான் சில்க் ஸ்மிதாவாக எந்த பயோப்பிக்கிலும் நடிக்கவில்லை. நன்றி என பதிவிட்டுள்ளார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அப்போ எதுக்கு அப்படியொரு போட்டோவை பதிவிட்டீங்க. அதில் பார்க்க நீங்க சில்க் ஸ்மிதா மாதிரி இருந்ததால் தானே நாங்கள் அப்படியெல்லாம் நினைச்சோம் என பொங்கு வருகின்றனர்.