நடிகை எமிஜாக்சன் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். கடந்த வாரம் தான் இவருக்கு, மிகவும் பிரமாண்டமாக, வளையக்காப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில், அனைத்துமே அவருக்கு பிடித்த நேவி ப்ளுவில் அலங்கரித்து அசத்தி இருந்தார் அவருடைய காதலர் ஜார்ஜ்.

இவரின் வளையக்காப்பு நிகழ்ச்சியில், எமி ஜாக்சனுக்கு நெருங்கிய நண்பர்கள் மட்டும் குடும்ப உறுப்பினர்கள், முக்கியமாக பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இந்நிலையில், எமி தற்போது இவரின் காதலருக்கு சர்பிரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். ஜார்ஜ் 32 பிறந்தநாளுக்கு மிகவும் சஸ்பென்சாக, தானே மிகவும் கஷ்டப்பட்டு வீட்டை அலங்காரம் செய்து, காலை உணவையும் தன்னுடைய கைகளால் சமைத்து பரிமாரியுள்ளார். மேலும் தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஸ்கேன் படத்தையும் அவர் பார்வையில் படும் படி வைத்து அசத்தியுள்ளார்.

இதனால் ஜார்ஜும் தன்னுடைய 32 ஆவது பிறந்தநாளை, காதலி எமி, அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையோடு, மிகவும் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தார். தற்போது இதுகுறித்த ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வர துவங்கியுள்ளன. குழந்தை பிறந்த பின், எமி மற்றும் ஜார்ஜின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.