இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் விவாகரத்து பெற்ற  பின்னர் நடிகர் அமலா பால் முழுக்க திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.  ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர ஆரம்பித்துவிட்டார். தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் தான். அதில் சூப்பர் வுமன் அளவிற்கு அமலா பால் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளாராம். 

தற்போது ஹீரோயினுக்கு நல்ல வெயிட்டான கேரக்டர் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இடையில் மும்பையைச் சேர்ந்த பாடகரான பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த புகைப்படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நொடியில் இருந்தே சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது. 

 

இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் எல்லாமே தெரியுது”... கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...!

இதையடுத்து அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறுதலாக சோசியல் மீடியாவில் வைரலானதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அமலா பால் தனது கேரளாவில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்கியுள்ளார். 

 

 

இதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!

அங்கிருந்த படியே அவ்வப்போது தனது கவர்ச்சி கிளிக்ஸை பதிவேற்றி ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். தற்போது தனது சகோதர்களுடன் கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் முகக்கவசம் அணிந்த படி போஸ் கொடுத்துள்ளார். ஆண்களை போல் வேட்டி, சட்டையில் செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள அமலா பாலின் இந்த போட்டோ செம்ம வைரலாகி வருகிறது.