Amala Paul : என் சாப்பாட்டை திருடும் "பேட் பாய்ஸ்" - கணவர் & சகோதரரை கழுவி ஊற்றிய அமலா பால்! Viral Video!
Amala Paul : பிரபல நடிகை அமலா பாலுக்கும், ஜெகத் தேசாய் என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணமானது. தற்பொழுது அமலா பால் கர்ப்பமாக உள்ள விஷயம் அனைவரும் அறிந்ததே.
தமிழ் திரையுலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை துவங்கிய நடிகை தான் அமலா பால். அதன் பிறகு அதே 2010 ஆம் ஆண்டு வெளியான "மைனா" என்கின்ற திரைப்படம் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.
அதன் பிறகு தளபதி விஜய், விக்ரம் மற்றும் ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினார் நடிகை அமலாபால். இந்த சூழலில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை காதலித்து அமலா பால் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் இருவரும் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.
அதன்பிறகு பல ஆண்டுகள் தனித்து வாழ்ந்து வந்த பிரபல நடிகை அமலா பால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு விரைவில் ஒரு குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரோடு அடிக்கும் டூட்டிகளை பதிவிடும் அமலா பால் தற்பொழுது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
முதலில் தனது உணவுகளை திருடி சாப்பிடும் பழக்கம் தனது சகோதரரிடம் இருந்ததாகவும், தற்போது அந்த வேலையை தனது கணவர் பார்த்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் அமலா பால். தற்போது அவர் வெளியிட்ட அந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.