’தேவைக்கும் அதிகமாகவே ஓய்வெடுத்து முடித்துவிட்டேன். யாராவது சீக்கிரமா படத்துல நடிக்க சான்ஸ் குடுங்க பாஸ்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெட்கத்தை விட்டு வாய்ப்புக் கேட்டிருக்கிறார் நடிகை அமலா பால். ஆனால் அந்த கூக்குரலுக்கு எந்த இயக்குநரும் செவி சாய்ப்பதாய் தெரியவில்லை.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரிலீஸான ‘ஆடை’படத்துக்குப் பின்னர் நயன்தாராவையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு தமிழின் நம்பர் ஒன் நடிகையாகிவிடுவார் என்கிற அளவுக்கு அவருக்கு பில்ட் அப் இருந்தது. முன்னர் சுமார் 30,40 லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர், புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் ‘ஆடை’ரிலீஸுக்காகக் காத்திருந்தார். ஆடை ஹிட்டடித்தால் தனக்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் கிடைக்கும் என்பது அமலா பாலின் ஆசை. ஆனால் அப்பட ட்ரெயிலர் வந்த ஓரிரு நாட்களிலேயே ஏற்கனவே கமிட் ஆன விஜய் படம் பறிபோனது.

அடுத்து படம் ரிலீஸாகி எவ்வித சலசலப்பையும் ஏற்படுத்தாத நிலையில் அமலாவைத் தேடி, ஏற்கனவே கதை சொன்னவர்கள் கூட திரும்பிப்பார்க்கவில்லை. தற்போது அமலாவின் கைவசம் இருப்பது ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்ட ‘அதோ அந்தப் பறவை போல’என்கிற ஒற்றைப் பறவை மட்டுமே. இடையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அரைகுறை உடைகளுடன் மலையேறியது, லுங்கி கட்டிக்கொண்டு தம் அடித்தபடி லூட்டி அடிப்பது என்று எத்தனையோ கவர்ச்சிப் படங்களை அமலா பகிர்ந்தும் இயக்குநர்கள் தரப்பிலிருந்து ‘நோ பீஸ் ஆஃப் ரெஸ்பான்ஸ்’.எனவே இன்று வெட்கத்தை விட்டு வாய்ப்புக் கேட்க ஆரம்பித்திருக்கும் அமலா பால் தனது ட்விட்டர் பதிவில்,...ஒரு நல்ல ரெஸ்ட் எடுத்த பிறகும் கொடுக்கும் உழைப்பில் நல்ல தரம் இருக்கும். அப்படிப்பட்ட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.எனக்கு விதிக்கப்பட்ட வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’என்று பதிவிட்டிருக்கிறார்.