பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.  அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். "குளிர் 100" படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் "ராஜா, ராணி" தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். சீரியலில் சின்னய்யா...சின்னய்யா... என்று கொஞ்சிய ஆல்யா ரசிகர்கள் மனதை மட்டுமல்ல சஞ்சீவையும் கவர்ந்தார். ஏற்கனவே காதலித்து வந்த சதீஷ் என்பவரை பிரேக் அப் செய்து விலகிய ஆல்யா, சஞ்சீவ் மீது காதல் கொண்டார். 

காதலில் கசிந்துருகிய ஆல்யா மானசா , சஞ்சீவ் ஜோடி வெற்றிகரமாக திருமணமும் செய்து கொண்டனர். இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில், ஆல்யா மானசா கர்ப்பமானார். இதனால் சஞ்சீவ் மட்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான ஆல்யா மானசா தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். 

இந்நிலையில் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது செல்ல மகளுக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தையை பெற்றெடுத்ததும் ஆல்யா மானசா முதல் முறையாக கொண்டாடும் பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சஞ்சீவ். இதுகுறித்த விடியோவை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஆல்யா.

ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களே ஆகும் நிலையில்,ஆல்யா மானசா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். ஆல்யாவை பப்பு... பப்பு.. என கொஞ்சி மகிழும் சஞ்சீவ் அசத்தலான சர்ப்பிரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். தனது கணவர் தனக்கு கொடுத்த அசத்தல் சர்ப்பிரைஸ் குறித்த வீடியோவை ஆல்யா தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில், சஞ்சீவ் தங்கியுள்ள வீட்டின் மொட்டை மாடியில் மின் விளக்குகள் ஜொலிக்க அலங்கரிக்கப்பட்டுள்ளது.அங்கு கேக் வெட்டி மனைவியுடன் சந்தோஷமாக பிறந்தநாள் கொண்டாடினார். 

 

View this post on Instagram

Thank u so much 😊🥰😍🎉🎁🎂🥳

A post shared by Alya Manasa (@alya_manasa) on May 27, 2020 at 2:03am PDT

அத்துடன் ஆல்யா மானசா பிறந்தநாள் கொண்டாட்டம் முடிவதற்கு முன்பு அசத்தலான கிப்ட ஒன்றையும் கொடுத்து அசத்தியுள்ளார். அப்படி என்ன கிப்ட என்று தானே கேட்கிறீர்கள்... அதுதாங்க ஆல்யாவுக்கு ரொம்ப பிடிச்ச புடவை ஒன்றை சஞ்சீவே பார்த்து, பார்த்து டிசைன் செய்து வாங்கி கொடுத்துள்ளார்.