பிரபல நடிகை ஒருவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில்  பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சாக்லேட், ஸ்வீட் பன், ஜூஸ், புரூட்ஸ், போன்றவற்றை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மருத்துவர் ஒருவர், நடிகைக்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக அணைத்து விதமான பணிகளும் முடங்கியதால் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்தனர். எனினும் தற்போது ஒரு சில தளர்வுகள் கொண்டு வந்தாலும், தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடனே பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை சற்று வித்தியாசமாக யோசித்து, இரவு - பகல் பாராமல், நோயாளிகளுக்கு கண் விழித்து, அவர்கள் உயிரை காப்பாற்ற பணியாற்றி வரும், மருத்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சாக்லேட், ஸ்வீட் பன், புரூட், நட்ஸ், போன்றவற்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் கொரோனாவில் இருந்து பாதுகாக்க நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணி மிகப்பெரியது என்றும், நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் தனது டுவிட்டரில் கூறியபோது ’ஸ்வீட், ஸ்னாக்ஸ் அனுப்பிய ஆலியாபட் அவர்களுக்கு மிகவும் நன்றி. இந்த கொரோனா நேரத்தில் இடைவிடாது பணி செய்து கொண்டிருக்கும் எங்களுக்கு இது ஒரு ஆச்சரியமாக அனுபவம். அனைத்து டாக்டர்கள் சார்பில் நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு சசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.