பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், தன்னுடைய பிறந்த நாள் அன்று, இதுவரை தனக்கு விசுவாசமாக வேலை செய்த கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு 50 லட்சத்தில் சொந்த வீடு வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஆலியா பட். 2012 ஆம் ஆண்டு "ஸ்டுடென்ட் ஆப் தி இயர்" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த 'ஹை வே' திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்ததை தொடர்ந்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கி வரும் 'RRR ' படத்தில் நடித்து வருகிறார். மேலும் 'kalank ', ஸ்டுடென்ட் ஆப் தி இயர் பார்ட் 2 , என அடுக்கடுக்காக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய 26 ஆவது பிறந்த நாளை கடந்த 15 ஆம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாடினார். இதில் பிரபல பாலிவுட் திரைத்துறை பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு இவரை வாழ்த்தினர்.

இவர் பிறந்தநாளை முன்னிட்டு, இத்தனை நாட்கள்  தனக்கு மிகவும் விஸ்வாசமாக வேலை செய்த தன்னுடைய கார் டிரைவர் மற்றும் உதவியாளருக்கு சொந்த வீடு வாங்க 50 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்த பணத்தை வைத்து அவர்கள் மும்பையில் புது வீடு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறிய வயத்தில் ஆலியாவின் உதவி மனப்பான்மையை பலர் பாராட்டி வருகின்றனர்.