தமிழ் சினிமாவில் பல மாற்றங்களும், சீர்திருந்தங்களும் அரங்கேறிய பொன்னா காலம் உண்டு. பல ஜாம்பவான்கள் இது எல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைத்த பல விஷயங்களை தங்களுக்கு கிடைத்த குறைவான வசதியைக் கொண்டு கண்முன் மெய்ப்பித்து காட்டியுள்ளனர். ஆனால் சில அரைகுறை இயக்குநர்களால் தமிழ் சினிமாவின் பண்பாடும், பாரம்பரியமும் சுக்குநூறாக சிதறிவருகிறது. அடல்ட் காமெடி என்ற பெயரில் திரையில் ஆபாசத்தை புகுத்தும் இரண்டாம் குத்து படத்திற்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஆபாச படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரண்டாம் குத்து. வாயால் சொல்லக்கூசும் அளவிற்கு படுகேவலமான இந்த தலைப்பின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்து காரணம், கண்ணால் பார்க்க முடியாத அளவிற்கு படுக்கையறை காட்சிகளும், காதில் கேட்க முடியாத அளவிற்கு டபுள் மீனிங் வசனங்களும் அதிகம் இருந்தன. 

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இரண்டாம் குத்து படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், ரேஸரும், நடிகையுமான அலிஷா அப்துல்லாவும் இரண்டாம் குத்து பற்றி ட்வீட் போட்டுள்ளார். “இரண்டாம் குத்த ட்ரெய்லரை தற்போது தான் பார்த்தேன்.. இது போன்ற படங்கள் எடுக்கப்படுவதை பார்க்க ஒரு மாதிரியாக இருக்கிறது. இது போன்ற படங்களை எப்படி ரிலீஸ் செய்யலாம்?. இது போன்ற படங்களுக்கு தடை விதிக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.