'வட சென்னை’ மிகவும் தரமான ஒரு படம். அதில் கெட்டவார்த்தைகள் இருப்பதாகச்சொல்லி படத்தை திரையிடக்கூடாது என்பதெல்லாம் நல்ல சினிமாவுக்கு செய்கிற துரோகம். கெட்ட வார்த்தைகளை சந்திக்காமல் வாழ்வின் ஒருநாளையாவது கடந்துபோக முடியுமா?’ என்கிறார் நடிகை ஐஸ்வர்யா.

‘இதைப்பற்றியெல்லாம் நான் பேசலாமா கூடாதா என்பது கூட எனக்குத்தெரியாது. ஆனால் படத்தை ரசித்து ரசித்து செதுக்கிய வெற்றிமாறன் சாரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது’ என்கிற ஐஸ்வர்யா அடுத்து இரண்டு மலையாளப்படங்களிலும், ‘டாடி’ என்கிற ஒரு இந்திப்படத்திலும் நடித்து வருகிறார்.

‘என் பலமே நான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்பதுதான். மற்ற மொழிப்படங்களில் நடித்தாலும் கண்டிப்பாக தமிழ்ப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். சமீபகாலமாக என் திருமணம் குறித்து அதிகம் கேட்கிறார்கள். சமீபகாலமாக ஏனோ திருமணம் குறித்த எண்ணமே வரவில்லை.நான் நடிகையான பிறகு இதுவரை ஒருவர் கூட ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை.  என் மனம் கவர்கிற ஒருவர் கண்ணில் தென்பட்டால் அடுத்தநாளே திருமணம் செய்துகொள்வேன்’ என்கிற ஐஸ்வர்யாவிடம் ‘மி டு’ விவகாரம் பற்றிக் கேட்டால் கருப்பாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் இதுவரை யாரும் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை’ என்கிறார்.

இந்த செய்தையைப் படித்த பிறகாவது யாராவது ஐஸ்வர்யாவுக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லுங்க பாஸ். உடனே ஒர்க் அவுட் ஆக வாய்ப்பிருக்கு.