கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நலிந்த கலைஞர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் வசதி படைத்த நடிகர் - நடிகைகள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வ மணி தரப்பில் இருந்தும், நடிகர் சங்க தனி அதிகாரி தரப்பில் இருந்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெள்ளித்திரை பிரபலங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவியை பணமாகவும், அரிசி மூட்டைகளாகவும் நலிந்த கலைஞர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உதவியுள்ள நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ரூ.1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னால் முடிந்த சிறு உதவியை செய்துள்ளேன், வேலையில்லாமல் இருக்கும் அவர்களுக்கு தொடர்ந்து பலர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.