உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் , இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் படு வேகமாக ஒரு செய்து பரவி வருகிறது.

பொதுவாக பிரபலங்கள் எது செய்தாலும் அது வைரலாகிவிடும், அந்த வகையில் சமீபத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் அவருடைய கணவருடன் பீச் பகுதியில் நடந்து செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவியது.

இந்த புகைப்படத்தில் அபிஷேக் பச்சன், வெள்ளை நிற டி- ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் மிகவும் சிம்பிள்ளாக கவுன் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் இவரின் வயிறு சற்று பெரிதாக காணப்படுவதாக கூறி, ரசிகர்கள் பலர் ஐஸ்வர்யா ராய்யிடம், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறீர்களா என்கிற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள். 

ஆனால் தற்போது வரை இதற்க்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மேலும் சில ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய்யின் இரண்டாவது குழந்தைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் ஐஸ்வர்யா ராய், வயிறு பெரிதாக உள்ளது தெளிவாக தெரிகிறது. எனினும் பலர் இது உண்மையா என கேட்டு வருகிறார்கள்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு தற்போது ஆராத்யா, என்கிற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் தகவலை தொடர்ந்து ஐஸ்வர்யாவிற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.