உலக நாடுகளை கடந்து, இந்தியாவை ஆட்டி படைத்தது வரும் கொரோனாவின் பிடியில் சிக்கி, உடல் நலம் தெரிய நடிகை, ஐஸ்வர்யா ராய் மிகவும் உருக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. முதலில் அமிதாப் பச்சனுக்கு, கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டடது.  இதையடுத்து எம்.பி ஜெயா பச்சனை தவிர, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்,மற்றும் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

அதில் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருடைய உடல்நிலையில் சிறு மாறுதல் ஏற்பட்டதால் அவர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே போல் இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, அவர்கள் தங்களை தனிமை படுத்திகொண்டு வீட்டிலேயே இருந்த நிலையில், திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஐஸ்வர்யா ராய்யின் கணவர் அபிஷேக் பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா நெகடிவ் என வந்ததால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அறிவித்தார். மேலும் விரைவில் நானும், தந்தை அமிதாப் பச்சனும் விரைவில் குணமடைவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின் நடிகை ஐஸ்வர்யா ராய், இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,“எனது குடும்பத்தினர் நலம் பெற நீங்கள் காட்டிய அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். உங்களின் இந்த அன்பைக் கண்டு எனது இதயம் கரைந்துவிட்டது. மிக்க நன்றி” என்று கூறி கையெடுத்து வணங்குவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.