நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக, Njandukalude Nattil Oridavela என்கிற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு திறமையை நிரூபித்து, சிறந்த அறிமுக நடிக்கைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.

தமிழில், கடந்த ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் மற்றும் தமன்னா அதிரடி காட்சிகளில் மிரட்டிய 'ஆக்ஷன்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தனுஷுக்கு ஜோடியாக 'ஜகமே தந்திரம்', மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான, 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: பிரபல இளம் நடிகர் விபத்தில் சிக்கி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!
 

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அணைத்து திரைப்பட பணிகளும் முடங்கியுள்ள நிலையில், வீட்டில் தங்களுக்கு பிடித்தபடி நேரம் செலவிட்டு வருகின்றனர் பிரபலங்கள். அதே நேரத்தில் மிகவும் வித்தியாசமாக போட்டோ ஷூட்  நடத்தி அந்த புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை  ஐஸ்வர்யா லட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய அம்மாவின் பட்டு புடவையை வித்தியாசமாகவும், ஸ்டைலிஷாகவும் கட்டியபடி  எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவருடைய அம்மா அதே புடவை கட்டி எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்: உடலை வளைத்து... நெளித்து... அந்த இடத்தில் உள்ள டாட்டூ தெரிய கவர்ச்சி சூடேற்றும் யாஷிகா! ஹாட் வீடியோ!
 

பொதுவாக, மாடர்ன் புடவைகளை கட்டி கவர்ச்சிகரமாக போஸ் கொடுக்கும் இந்த காலத்து நடிகைகள் மத்தியில், அம்மாவின் புடவையில் அம்சமாக போட்டோ ஷூட்  செய்து பகிர்ந்துள்ள  நடிகையின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. எனவே இவருக்கு லைக்குகளை அள்ளி  குவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@iamkishoreradhakrishnan for May cover of @grihalakshmi_ @mspinkpantherjewel . @vj_shruthi

A post shared by Aishwarya Lekshmi (@aishu__) on May 2, 2020 at 4:00am PDT