செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்ந்து, திரைதுறையில் ஈடுபாடுடன் நடித்து, சாதித்தவர்கள் பலர். அந்த வகையில் போட்டி நிறைந்த இந்த துறையில், காற்று வெளியிடை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை ஒட்டுமொத்தமாக கவர்ந்தவர் நடிகை அதிதி ராவ்.

இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' படத்திலும் நடித்திருந்தார். அதே போல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'சைகோ' படத்தில் இவருடைய நடிப்பு நடிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

மேலும் தற்போது துக்ளக் தர்பார், பொன்னியின் செல்வன் உட்பட சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

அதிதி ராவ்வை பொறுத்தவரை, இயக்குனர் சொல்லும் நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பர்பெக்ட்டாக ஆஜராகி விடுவாராம். எவ்வளவு பெரிய சீன் என்றாலும், அதனை கற்று கொண்டு ஒரே டேக்கில் நடித்து, படக்குழுவினரிடம் கை தட்டல்களையும் அள்ளுகிறார் .

அதே நேரத்தில், படக்குழுவினர் ஷூட்டிங் நேரத்தில் லேட் செய்தாலோ... அல்லது காக்க வைத்தாலோ... டென்ஷன் ஆகி விடுவாராம். நேரடியாக இயக்குநர்களிடமே வாக்கு வாதத்திலும் ஈடுபடும் குணம் உடையவராம்.