தனக்கு வரக்கூடிய எதிர்காலக் கணவனுக்கு மிகவும் வினோதமான எட்டுவிதக் கட்டளைகள் இட்டிருக்கிறார் நடிகை அடா ஷர்மா.மிகத் தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்திருக்கும் அவர் அந்த எட்டுக்கட்டளைகளுக்கு சம்மதிக்கும் எவரை வேண்டுமானால் தான் திருமணம் செய்துகொள்ளத்தயார் என்று அறிவித்து அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

இந்தியில் ‘1920’படத்தில்  அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான அடா ஷர்மா தமிழில் பாண்டிராஜ், சிம்பு காம்பினேஷனில் வெளிவந்த ‘இது நம்ம ஆளு’படத்தில் கவுரவ வேடத்திலும் பிரபு தேவா, ஷக்தி சிதம்பரம் கூட்டணியின் ‘சார்லி சாப்ளின்’படத்திலும் நடித்தார். தெலுங்கிலும் இந்தியிலும் கவர்ச்சியில் கரைகண்டவர் என்ற பெயர் பெற்ற அடா ஷர்மா தனக்கு திருமண வயது தாண்டிவிட்டதால் கொஞ்சம் அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். அந்த மாப்பிள்ளைக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என்று ஷர்மா நினைப்பவை மிகவும் சிம்பிளானவைதான்.

இனி நிபந்தனைகளைப் பார்க்கலாமா?
1.வெங்காயம் சாப்பிடக்கூடாது.
2.சாதி,நிறம்,ஷூ சைஸ்,நீச்சல் அனுபவம்,புஜபலம் இதெல்லாம் பத்தி கவலை இல்லை.
3.தினமும் ஷேவ் பண்ணி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும்.
4.தினமும் 3 நேரமும் சமைக்கணும்.எப்பவுமே சிரிச்ச முகமாகவே இருக்கணும். (உள்ளே அழுதாலும் வெளியே சிரிக்கணுமா?]
5.இந்தியன் டிரஸ் கோட் தான்!
6.தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கணும்.
7.மது,மாமிசம் கூடாது.
8.எல்லா மொழிப் படங்களையும் பார்க்கணும் .என்னிடம் டிஸ்கஷன் பண்ணனும்....ஆகியவைதான் அவரது கண்டிசன்கள். ட்ரை பண்ணிப்பாருங்களேன்.