ட்விட்டர் பதிவுகளில் அமலா பால் போன்ற நடிகைகள் தங்களது அடுத்த பட சான்ஸைப் பிடிக்க படு கிளாமரான படங்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை அடா ஷர்மா தான் மிரட்டலாக சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பார்ப்பவர்களை அசரடித்துள்ளார்.

2008ல் ‘1920’என்ற இந்திப்படத்தின் மூலம் அறிமுகமான அடா ஷர்மா, அடுத்து தெலுங்குப் படங்களிலும் பிசியாகி, பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டது மட்டுமே ரீச் ஆகவே அவருக்கு அடுத்து தமிழில் சார்லி சாப்ளின் தவிர சொல்லிக்கொள்ளும்படி படங்கள் அமையவில்லை.

இந்தியில் அடுத்து ரிலீஸாகவிருக்கும் ‘கமாண்டோ 3’படத்தை ஆவலுடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அடா ஷர்மா ஓய்வு நேரங்களில் சிலம்பம் கற்கத் துவங்கி தற்போது செம எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார். என்னடா ஒரு இந்திக்காரப் பொண்ணு இவ்வளவு சூப்பரா சிலம்பம் சுத்துதே என்று வியப்பவர்களுக்கு ஒரு துணுக்குச் செய்தி .அடா ஷர்மாவின் தந்தை எஸ்.எல்.ஷர்மா மதுரையைச் சேர்ந்த பச்சைத் தமிழர்.