தல அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தில் மூன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகைகள், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், மற்றும் ஆண்ட்ரியா தரங் ஆகியோர்.

இந்நிலையில் முதல் முறையாக இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை அபிராமி வெங்கடாச்சலம், இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்தும், தனக்கு நேரத்தை அனுபவங்களையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகியில், பல படங்களில் தன்னை கமிட் செய்து, உறுதி செய்த பிறகும் கூட, கடைசி நேரத்தில் புதுமுகம் என்கிற காரணத்தை கூறி விளக்கி இருக்கிறார்கள்.

அதனால் இயக்குனர் வினோத், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என கூறியதை கூட கடைசி வரை என்னால் நம்பமுடியவில்லை. அவர் என்னுடைய நடிப்பு திறமையை வெளிக்கொண்டுவர ஒரு வாய்ப்பு கொடுத்தார் என கண்களில் கண்ணீர் வர கூறியிருந்தார். 

மேலும் இயக்குனர் வினோத் குறித்து கூறிய அபிராமி, நான்... நிறைய இயக்குனர்களுடன் நடித்தது இல்லை என்றாலும், வினோத் தன்னை பொறுத்தவரை மிகவும் திறமையான இயக்குனர் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதை தொடர்ந்து அஜித் குறித்து பேசுகையில்... பெரிய ஹீரோவாக இருந்தும், அவரின் சிம்பிள் இது வரை தன்னால் நம்ப முடிய வில்லை சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் வந்து கூட அசத்தினார் என கூறியுள்ளார்.