Asianet News TamilAsianet News Tamil

அடுத்த ஹீரோயின் ரெடி! தாய்ப்புலியுடன் குத்தாட்டம் போட்ட குட்டிப்புலி.. வைரலாகும் நடிகை கஸ்தூரி மகள் வீடியோ!

பிரபல தெனிந்திய நடிகையான கஸ்தூரி சங்கர், தன்னுடைய மகளுடன் மாடன் உடையில் க்யூட்டாக குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Actres Kasthuri Shankar Shobini Dance video goes viral mma
Author
First Published Aug 13, 2024, 4:36 PM IST | Last Updated Aug 13, 2024, 4:40 PM IST

பிரபல நடிகையும் மாடலுமான கஸ்தூரி 1991 ஆம் ஆண்டு 'ஆத்தா உன் கோயிலிலே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து அழகி போட்டிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்த இவர், 1992-ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றார். பின்னர் அதே ஆண்டு ஃபெமினா மிஸ் மெட்ராஸ் பியூட்டி பேஜென்டில் கலந்து கொண்டார். அடுத்தடுத்து பல்வேறு மாடலிங் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவருக்கு, அழகி போட்டிக்கு பின்னர் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் வரிசை கட்ட துவங்கியது.

அந்த வகையில், ராசா வரும் நாள், கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை, சின்னவர், உரிமை ஊஞ்சலாடுகிறது, செந்தமிழ் பாட்டு, அபிராமி, போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். உலகநாயகன் கமலஹாசன் கமல்ஹாசனுக்கு தங்கையாக 'இந்தியன்' திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஸ்ரீதேவி முதல்... பானுபிரியா வரை! 14 வயசுலயே ஹீரோயினாக மாறிய 6 நடிகைகள்!

Actres Kasthuri Shankar Shobini Dance video goes viral mma

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை கஸ்தூரி, சன் டிவியில் 'கையளவு மன'சு என்கிற சீரியலில் 1995 ஆம் ஆண்டு நடித்தார். இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தொகுப்பாளராகவும், நடுவராகவும், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வயல்காடு மூலம் உள்ளே சென்று  63 வது நாளில் வெளியேறினார்.

வெளியில் வந்த பின்னர் பிக்பாஸ் குறித்து பல்வேறு விமர்சனங்களை ஓப்பனாக கூறினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின், கன்னட வெர்ஷனில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியா' என்கிற தொடரில் நடித்து வருகிறார்.

பணத்துக்காக திருமணத்தையே நிறுத்திய அம்மா? நடிகருடன் Living Relation-ல் அசிங்கப்பட்ட த்ரிஷா! பிரபலம் ஷாக் தகவல்

Actres Kasthuri Shankar Shobini Dance video goes viral mma

நடிகை கஸ்தூரியை பொறுத்தவரை, சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத ஒரு பிரபலமாகவே பார்க்கப்படுகிறார். காரணம் தன்னுடைய மனதில் பட்டத்தை எந்த ஒரு பின் விளைவுகளையும் யோசிக்காமல் பேச கூடியவர். இது ஒரு சில விஷயங்களில் இவருக்கு பாதகம் என்றாலும்... இவர் எதையும் உடைத்து பேச கூடியவர் என்பதால் இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. அதே போல் நடிகைகள் குறித்து எழும் விமர்சனங்களுக்கு நெற்றி பொட்டில் அடிதப்போல் பதிலடி கொடுக்க கூடியவர். 

 

நடிகை கஸ்தூரி அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு சோபினி என்கிற மகளும், சங்கல்ப் என்கிற மகன் ஒருவரும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய மகளுடன் நீயா நானா நிகழ்ச்சியில் கஸ்தூரி தன்னுடைய மகளுடன் கலந்து கொண்டபோது, அவரின் மகள் மிகவும் எளிமையாக... ஒரு பிரபலத்தின் மகள் என இல்லாமல் சாதாரணமாகவே இருந்த நிலையில், தற்போது கஸ்தூரியின் மகள் ஹீரோயின் போல் வளர்ந்து, கியூட் தேவதை போல் மாறியுள்ளார்.

அம்மாவுடன் சேர்ந்து சோபினி ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ள நிலையில், இந்த வீடியோ படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கஸ்தூரியே பார்க்க 18 வயது போல் இருக்கும் நிலையில், உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios