பிரபல நடிகர் சிவக்குமாரின் மகன்களாகவே இருந்தாலும், மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சாதித்து காட்டியவர்கள் நடிகர்கள் சூர்யா, கார்த்தி. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வந்தாலும், ஆரம்ப கட்டத்தில் இருவரும் சந்தித்த தோல்வி மற்றும் அவமானங்கள் ஏராளம். 

இதையும் படிங்க: கணவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே... ஜெயம் ரவி, அல்லு அர்ஜூனுக்கு சவால் விட்ட ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ...!

அனைத்தையும் பொருட்படுத்தாது சாதிக்க வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்துடன் போராடி வெற்றி பெற்றார்கள். சினிமாவில் ஒரு கேரக்டரில் நடிப்பதற்காக அண்ணன், தம்பி இருவரும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதிலும் சூர்யா போல் தனது உடல் வாகை படத்திற்கு படம் மாற்றுவது மிகவும் கடினமான ஒன்று. 

தற்போது இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் அவருடைய பேவரைட் இயக்குநர் ஹரியுடன் சேர்ந்து அருவா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்தியின் கைவசமும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், சுல்தான் ஆகிய படங்கள் உள்ளன. 

இதையும் படிங்க: “ஆன்ட்டி” என்று கிண்டலடித்தவரை வச்சி செய்த பிக்பாஸ் ஷெரின்... வைரலாகும் நெத்தியடி பதிவு...!

சினிமாவில் பிசியான ஹீரோக்களாக வலம் வரும் அண்ணன், தம்பி இருவரும் தங்களது இளமை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. சூர்யா டீ-சர்ட், ஜீன்ஸுலும், கார்த்தி பேண்ட், சட்டையிலும் இருக்கும் அந்த புகைப்படம் பார்க்க செம்ம லைக்குகளை குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்...