கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் அந்த மலையாள திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அய்யப்பன் நாயரை அட்டப்பாடி தமிழ் பழங்குடியாக காட்சிப்படுத்தியுள்ள இயக்குநர், பிரத்யேக பாடல் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். 

இதையும் படிங்க:  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

அந்த படத்தில் இடம் பெற்ற ‘களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு’ என்ற பாடல் உலக அளவில் பேமஸ் ஆகிவிட்டது. அட்டப்பாடியில் வசிக்கும் ஒரு தமிழ் பழங்குடிப் பெண்ணால் இட்டுக்கட்டி பாடப்பட்ட அந்த பாடலை நன்றாக உற்றுக் கேட்டால் தமிழ் வார்த்தைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது புரியும்.மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். 

இதையும் படிங்க:  “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பலரும் கைப்பற்ற போட்டியிட்டனர். இறுதியாக தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர்களும் ஆர்வமாக உள்ளனர். அதே சமயத்தில் சரத்குமார் - சசிகுமார், சசிகுமார்  - ஆர்யா என பலர் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இந்த படத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களும், அண்ணன் - தம்பியுமான சூர்யா, கார்த்தி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

இந்த அதிசயம் மட்டும் நடப்பதாக இருந்தால் சூர்யா, கார்த்தி முதன் முறையாக நடிக்க உள்ள படமாக “அய்யப்பனும் கோஷியும்” பட தமிழ் ரீமேக்காக இருக்கும் என இரண்டு டாப் ஹீரோக்களின் ரசிகர்களும் மரண வெயிட்டிங்கில் இருக்கின்றனர். ஆனால் சூர்யா - கார்த்தி தரப்பில் விசாரித்த போது  “அய்யப்பனும் கோஷியும்”  பட ரீமேக் விவகாரம் தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பிரச்சனைகள் முடிவடைந்த பிறகு நடிகர்கள், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.