‘சினிமாவில் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தபோது எவ்வளவோ நாட்கள் மொட்டை மாடியில் பட்டினியாய்ப் படுத்து உறங்கியிருக்கிறேன்’ என்று தனது தன்னை வறுமை ஆட்டிப்படைத்த கதையை ஃப்ளாஷ்பேக்காக சொல்கிறார் யோகி பாபு.

அவர் ஹீரோவாக நடித்து முடித்திருக்கும் ‘கூர்கா’,’தர்ம பிரபி’ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்குத் தயாராகியுள்ள நிலையில் மற்ற ஹீரோக்களுக்கு இணையாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார் யோகிபாபு.

இந்நிலையில் தான் பிரபலமாவதற்கு முன்பு பட்ட கஷ்டங்கள் பற்றிப் பேசிய அவர்,’’தர்ம பிரபு’ பட இயக்குநர் முத்துக்குமரனும் நானும் 15 ஆண்டுகால நண்பர்கள். நான் ‘லொள்ளு சபா’வில் நடித்து வாங்கிய காசில்தான் பல நாள் சாப்பிட்டோம். அதில் எத்தனையோ இரவுகள் மொட்டை மாடியில் பட்டினியாய் கதை பேசிக்கொண்டே படுத்து உறங்கியிருக்கிறோம். அந்த சமயத்தில் பேசிய கதைகளில் ஒன்றுதான் இன்று ‘தர்ம பிரபு ஆகியிருக்கிறது.

இக்கதையைக்கூறி நடிப்பீர்களா? கால்ஷீட் இருக்கிறதா என்று முத்துக்குமார் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன். நண்பர்களுக்குஅச் செய்யாமல வேறு யாருக்குச் செய்வது. அதே போல் ’கூர்கா’ படத்தின் இயக்குநர் சாம் ஆண்டனும் என் நீண்ட கால நண்பர்தான். இருவருடைய படங்களையும் ஒரே நேரத்தில் ஒப்புக்கொண்டுவிட்டு பகல் இரவு பாராமல் தூக்கம் பார்க்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறேன்’என்கிறார் யோகி பாபு.