தமிழ்சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு சொந்தமாக வீடு கட்டிக் குடியேறியுள்ளார். ஆனால் அதன் கிரஹப் பிரவேசத்துக்கு மிகச் சிலருக்கு அழைப்பு அனுப்பி ரகசியம் காத்திருக்கிறார்.

யோகி பாபுவின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் காத்திருக்கிறார்கள். ஒரு காட்சியிலாவது அவரை நடிக்க வைத்துவிட்டு, அதை படத்தின் புரோமோஷன்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். இப்படி பிஸியான நடிகரான யோகி பாபு, தற்போது விஜய், அஜித் என்று உச்ச நடிகர்களின் படங்களிலும் நடிப்பதால், தனது சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில், யோகி பாபு சென்னையில் பிரம்மாண்டமான முறையில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு தனது அம்மாவின் பெயரான ‘விசாலாட்சி இல்லம்’ என்று பெயர் வைத்திருப்பவர், சமீபத்தில் தனது புதிய வீட்டின் புதுமனைபுகு விழா நிகழ்வையும் நடத்தியிருக்கிறார். இச்செய்தியை காமெடி நடிகை ஆர்த்தி, தனது கணவர் கணேசுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட யோகி பாபுவின் திரையுலக நண்பர்களில் வெகுசிலர்மட்டுமே அழைக்கப்பட்டனர். அவரது பிரம்மாண்டமான வீட்டைப் பார்த்து ஆச்சரியப்படுவதோடு, அவரை வாழ்த்தியும் வருகிறார்கள். மற்ற காமெடி நடிகர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ புதுமனை புகுவிழாவை ரகசியமாக நடத்தி முடித்திருக்கிறார் யோகிபாபு.