Asianet News TamilAsianet News Tamil

பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட் சாம்பியன்...! வைரலாகி வரும் யோகி பாபுவின் அரிய புகைப்படம்!

முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடத்திலும், கதையின் நாயகனாகவும் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பவர், காமெடி நடிகர் யோகி பாபு. அவரது டைமிங் டயலாக்குகள் தான், இவரை ரசிகர்கள் மனதில் நிலைக்க வைத்துள்ளது.
 

actor yogi babu cricket champion in school days photo goes viral
Author
Chennai, First Published Jun 23, 2020, 4:50 PM IST

தமிழ் சினிமாவில், சிறு சிறு வேடங்களில் நடித்து, தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடத்திலும், கதையின் நாயகனாகவும் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பவர், காமெடி நடிகர் யோகி பாபு. அவரது டைமிங் டயலாக்குகள் தான், இவரை ரசிகர்கள் மனதில் நிலைக்க வைத்துள்ளது.

சமீப காலமாக, காமெடியனாக மட்டும் இல்லாமல்... ஹீரோயிசம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இப்படி நடிக்கும் படங்கள், முதலுக்கு மோசம் இல்லாமல் கல்லா கட்டி வருவதால், இவரை வைத்து திரைப்படங்கள் தயாரிக்கவும், இயக்கவும் கடும் போட்டியே நிலவி வருகிறது. இருப்பினும் சில மாதங்களுக்கு முன்பே, திருமணமாகி உள்ளதால், இரவு பகல் பாராமல் கண் முழித்து உழைத்தது போதும், முடிந்த வரை... குடும்பத்துடனும் நேரம் செலவிட வேண்டும் என ஹீரோவாக நடிக்கும் படங்களை குறைத்து கொண்டார்.

actor yogi babu cricket champion in school days photo goes viral

இந்நிலையில் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு ஓய்வு அமலில் உள்ளதால் படப்பிடிப்புகளில் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே மற்ற பிரபலங்களை போல் இவரும் உள்ளார். மேலும், தன்னால் முடிந்த வரை, ஊரடங்கு ஓய்வு காரணமாக பாதிக்கப்பட்ட திரையுலகை சேர்ந்த பலருக்கு உதவிகளை செய்தார். குறிப்பாக சென்னை மாநகர போலீசாருக்கு உயர்தர மாஸ்க், ஹாண்ட் சானிடைசர் போன்றவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor yogi babu cricket champion in school days photo goes viral

நடிகர் யோகி பாபு பல்வேறு கஷ்டங்களை கடந்து தான் திரையுலகத்தில் சாதித்தார் என்பது பலருக்கும் தெரியும், ஆனால் பள்ளியில் படிக்கும் போது, தேசிய மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஷிப் கோப்பையை வென்ற அணியில் ஒருவராக இருந்தார் என்பது பலரும் அறிந்திடாதே. 

இதுகுறித்த ஒரு புகைப்படம் தற்போது வெளியாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ...

 

Follow Us:
Download App:
  • android
  • ios