சீனாவைச் சேர்ந்த 64 வயது பிரபல நடிகர் சிமோன் யாம். இவர் பல சீன மொழி படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் சீனாவின் தெற்குப் பகுதி மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஜோங்ஷான் என்கிற கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது இவரை மர்பணபர் ஒருவர் தாக்கியது மட்டும் இன்றி, கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடைபெற்ற போது, சிமோன், கடையை திறந்து வைத்து விட்டு, தன்னுடைய ரசிகர்களுடன் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் இவரின் பக்கம் எழுந்து வந்துள்ளார். அவர் சாதாரணமாக தானே வருகிறார் என பாதுகாவலர்களும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம், தன்னுடைய பாக்கெட்டில் இருந்த கத்தியை கொண்டு, நடிகர் சிமோனை தாக்கினர். இந்த சம்பவத்தில், அவரது வயிறு மற்றும் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை தொடர்ந்து அந்த மர்ம நபரை மடக்கி பிடித்த பாதுகாவலர்கள், நடிகரையும் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் நடிகரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், ஏன் அந்த மர்ம நபர் இப்படி நடந்து கொண்டார் என்கிற காரணத்தை துருவி துருவி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.