நயன்தாராவை ஒருதலையாக காதலித்த நடிகருக்கு வந்த பொல்லாத ஆசையால் அல்லல் பட்டுக் கிடக்கிறார் அந்த காமெடி கதாநாயக நடிகர். 

‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை காதலிப்பது நடித்தாலும் நடித்தார், யோகிபாபுவையும் கதாநாயகர் பட்டியலில்
சேர்த்துக் கொண்டது தமிழ் சினிமா இயக்குநர்கள் வட்டாரம். 

அடுத்தடுத்து கூர்கா, தர்மபிரபு, ஜாம்பி என்று தன் பங்குக்கு சுமாருக்கும் சுமாரான லாபத்தை கொடுத்து வண்டியை நகர்த்தி வருகிறார் யோகி பாபு. காமெடியானாக நடித்து கதாநாயகனாக புரமோட் ஆனவர் ஹீரோவாகவே தொடர ஆசைப்பட்டுவிட்டார் பாவம். இந்த நேரத்தில் அவருக்கு நெருக்கமான ஒருவர் யோகிபாப்வுக்கு ஒரு பலமான ஐடியாவை கொடுத்துள்ளார். 

’’உடம்பை குறைச்சு ப்சந்தானம் மாதிரி ஆகி விடுங்கள். கமர்ஷியல் ஹீரோவாகவே நடித்து கலக்கலாம் என பிட்டை போட அதை தலைமேல் ஏற்றிக் கொண்ட யோகிபாபு கடந்த சில வாரங்களாக அரை பட்டினியாக கிடக்கிறார். காமெடியனாகி கலக்க அந்த உடம்பு மூல தனம். அதையும் குறைத்துக் கொண்டால் யோகி பாபு யோகமில்லாத பாபுவாகி விடுவார் என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது கோலிவுட் வட்டாரம்.