நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோட் படத்தின் சூட்டிங் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட்என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இருவேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். புத்தாண்டையொட்டி தி கோட் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தி கோட் திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தப் படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட்பிரபு இயக்கி வரக்கூடிய தி கோட் படத்தின் படப்பிடிப்புத் தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. ஒரு பக்கம் தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சியின் பெயரை அறிவித்த கையோடு நடிகர் விஜய் படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார்.
கோட் படத்திற்கு அடுத்து ‘தளபதி 69’ படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களோடு அவர் சினிமாவை விட்டு விலகுகிறார். கோட் (GOAT) படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகர் விஜய் நடித்துள்ள ஒரு காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கார் அருகில் நின்று கொண்டு நடிகர் தளபதி விஜய் இரண்டு நடிகர்களுடன் பேசும்படி அமைந்துள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!
