நடிகர் விவேக் நினைவில்  "அத்தி வரதர் கூட்டம்"...! பிகில் பறக்கும் அதிரடி பேச்சு..! 

மிகுந்த எதிர்பார்ப்பில் பிகில் பட இசை வெளியீட்டு விழா நேற்று தாம்பரத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் பெரும்பாலானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

விஜய் மற்றும் அட்லி இருவரும் இணையும் 3 ஆவது படம் பிகில். இந்த படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள இந்த படத்திற்கு இப்போதே வரவேற்பு கிளம்பி உள்ளது. இந்த படத்தில் விஜய் நயன்தாரா இந்துஜா விவேக் ஆனந்தராஜ் கதிர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் விவேக் பேசும் போது... 

"இந்த கூட்டத்தை பார்க்கும் போது.... எனக்கு அத்தி வரதரை காண மக்கள் கூடியதை போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டு உள்ளது. அதற்கு பிறகு இவ்வளவு கூட்டம் இங்கே தான் காண முடிகிறது. பிகில் படத்தில் இடம்பெற்றிருக்கும் கால்பந்து போட்டி பார்ப்பதற்கு ஒலிம்பிக்போட்டி போன்றே இருக்கும். அட்லீ மிக சிறப்பாக இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்.

 

வெற்றி என்பது எப்போதுமே ஒரு விதமான போதையை கொடுக்கும். ஆனால் அந்த போதை விஜய்க்கு இதுவரை இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் விவேக். இவருடைய பேச்சுக்கு நிகழ்ச்சியில் கூடியிருந்த அனைவரும் ஆரவாரமாக கைதட்டி வரவேற்றனர்.