நடிக்கும் காமெடி காட்சியில் கூட கருத்தாக பேசி,  ரசிகர்களை சிந்திக்க வைத்தவர் பிரபல நடிகர் விவேக். இவர் தற்போது அணைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து, மே 3ஆம் தேதி வரை விலகுவதாக தெரிவித்துள்ளது இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

எப்போதும் சோசியல் மீடியவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்  நடிகர் விவேக்... பல நல்ல கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். குறிப்பாக தற்போது உலக நாடுகளை கடந்து, இந்திய மக்களை பெருமளவு அச்சுறுத்து வரும், கொரோனா பற்றிய தீவிரத்தை எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தார். மேலும் அடிக்கடி இளையராஜாவின் பாடல்களை பியானோவில் வசித்து, ஷார் செய்தார். இவரின் இந்த திறமை பல ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் செய்திகள்: நடிகை ஜோதிகாவை கொதித்தெழ வைத்த தஞ்சை மருத்துவமனை... இப்படியெல்லாம் நடந்தால் கேள்வி கேட்கமாட்டார்களா?
 

இந்த நிலையில், தன்னுடைய பர்சனல் விஷயங்கள் காரணமாக மே 3 வரை,  அணைத்து சோசியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் விவேக். ஊரடங்கு முடியும் நாளை, இவர் கூறியுள்ளது ஏன்? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ரிஷி கபூருக்கு அஞ்சலி செலுத்த காஸ்ட்லீ காரில் படையெடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்! Exclusive புகைப்பட தொகுப்பு
 

கடந்த சில வருடங்களாகவே குறிப்பிட்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும், நடிகர் விவேக்கின் நடிப்பில் கடைசியாக, 'தாராள பிரபு' திரைப்படம் வெளியாகியது. ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில்   மருத்துவர் வேடத்தில் நடித்து கலக்கி இருந்தார் விவேக்.

நடிகர் விவேக் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, அப்துல் கலாம் அவர்களின் வழியை பின்பற்றி, மரம் நடுதல் மற்றும் பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, உணவின்றி கஷ்டப்பட்டு வந்த,  நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.