நடிகை ஜோதிகா கடந்த சில மாதங்களுக்கு முன் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு ''ராட்சஷி' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.  விருதை பெற்று பின் மேடையில் பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் அருகே சரியான பராமரிப்பு இன்றி, உள்ள அரசு மருத்துவமனையை பற்றியும், அங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் தஞ்சை பெண்கள், படும் கஷ்டத்தை கூறினார்.

குறிப்பாக,  பராமரிப்பு இல்லை என்றால் எப்படி கோவிலுக்கு நாம் செலவு செய்கிறோமோ அதே போல், மருத்துவமனைகளும், பள்ளிகளும் முக்கியம் எனவே அதற்கும் செலவு செய்யவேண்டும்’ என்று கூறினார்.

அங்கு கண்ட கட்சி கண்கலங்க வைத்ததாகவும், அங்கு பார்த்ததை சொல்ல கூட முடியவில்லை என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இவரின் இந்த பேச்சு ஒரு தரப்பு மக்களிடம் ஆதரவை கிடைத்தாலும், மற்றொரு தரப்பினர் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். கடந்த வாரம் முழுவதும் கொழுந்து விட்டு எரித்த ஜோதிகாவின் பரபரப்பு பேச்சு குறித்து, அவருடைய கணவர் சூர்யாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். 

மேலும், ஜோதிகாவின் பேச்சின் உண்மை உள்ளது என அறிந்து, அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் தங்களுடைய நன்றியை தெரிவித்தார்.

இந்நிலையில் ஜோதிகாவை கொதித்தெழ வைத்த, அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு  பெண் ஊழியரை மருத்துவமனை வளாகத்திலேயே கொடிய விஷ பாம்பு ஒன்று தீண்டியது.  இதனையடுத்து அந்த பெண் ஊழியர் தற்போது தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தால், மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்,   மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில், ஜேசிபி இயந்திரம் மூலம் மருத்துவமனையில் காடு போல் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டது.  மேலும் தஞ்சை மருத்துவமனையில் தஞ்சம் புகுத்த சுமார் பத்து பாம்புகளை வனவிலங்கு அதிகாரிகள் பிடித்தனர். இதில் கொடிய விஷம் கொண்ட 5 கட்டுவிரியன் பாம்புகளும் அடங்கும்.

உயிரை காப்பாற்றி கொள்ள மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரும் நிலையில், அங்கு  உயிரை எடுக்கும் கொடிய விஷம் கொண்ட பாம்புகள்  கண்டு பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த ஊர் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.