Asianet News TamilAsianet News Tamil

நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே...சுர்ஜித்துக்காக கண்ணீர் விடும் நடிகர் விவேக்...

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியரின் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடந்துசென்றபோது, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.பயன்பாடின்றி இருந்த அந்த ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியிருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியதாக தெரிகிறது.
 

actor vivek prays for the child surjith
Author
Chennai, First Published Oct 26, 2019, 11:12 AM IST

சிறுவன் சுர்ஜித் வில்சனின் நிலைமை மற்ற குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரது பதிவுக்குக் கீழே தாங்கள் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.actor vivek prays for the child surjith

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியரின் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடந்துசென்றபோது, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.பயன்பாடின்றி இருந்த அந்த ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியிருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியதாக தெரிகிறது.

குழந்தையை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக குழந்தையை மீட்கும் பல்வேறு மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர். குழந்தை சுவாசிப்பது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டது.ஆழ்துறை கிணற்றின் அருகே பக்கவாட்டில் குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட அடிக்கு மேல் பாறை இருந்ததால், தோண்டும்போது ஆழ்துளை கிணற்றில் கடும் அதிர்வு அதிர்வு ஏற்படும் என்பதால் அந்த முயற்சி நிறுத்திவைக்கப்பட்டது.actor vivek prays for the child surjith

குழந்தையை பத்திரமாக மீட்கும் நோக்கில் முதலில் குழந்தையின் ஒரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போடப்பட்டது.  மேலும் மற்றொரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போட முற்பட்டபோது அது பலன் அளிக்கவில்லை. மீண்டும் அம்முயற்சியை மேற்கொண்ட நிலையில் அக்குழந்தை பத்திரமாக மீட்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.கிணற்றில் விழுந்தபோது சுமார் 25  அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை, மீட்பு பணியின்போது 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் மீட்புப் பணி கடும் சவாலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சிறுவன் சுர்ஜித்துக்காக தமிழகம் முழுவதிலுமுள்ள மக்கள் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்துவரும் நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்,...சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு...என்று பதிவிட்டுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios